சடலமாக மீட்கப்பட்ட காதலர்கள் : கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம்!!

530

களுத்துறை கடற்கரையில் இளம் காதலர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கடந்த 26ஆம் திகதி வீட்டில் இருந்து சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் கடல் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

21 மற்றும் 18 வயதான காவிந்த சில்வா, ஸ்ரீமாலி என்பவர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் நாரம்மல மற்றும் பயாகல பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த இருவரது சடலமும் வேறு வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.