காத்திருந்த அதிா்ச்சி

காலி – தேவட்ட பகுதியில் உணவகம் ஒன்றில் நபரொருவர் பணத்தை திருடி செல்லும் விதம் சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது.

இரண்டு பெண்கள் உணவு பெற்றுகொள்வதற்காக உணவகத்திற்கு வந்த பொழுது குறித்த நபர் அங்கு வேலை செய்பவரை போல நடித்துள்ளார்.

பின்னர் அந்த பெண்கள் வாங்க வந்த உணவுகளுக்கான பணத்தை பெற்றுகொண்டு குறித்த நபா் அங்கிருந்து தப்பி செல்லும் விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து காலி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




