யசீர் அராபாத் மரணம் இயற்கையானதே : ரஷ்யா!!

875

Yaseerபாலஸ்தீன தலைவர் யசீர் அராபாத் கடந்த 2004ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரை மெல்லகொல்லும் விஷம் கொடுத்தும், கதிர்வீச்சு மூலமும் கொலை செய்ததாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது.

ஆனால் இதனை உறுதி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் அவரது உடல் உறுப்புகளை எடுத்து பல்வேறு நாடுகள் ஆய்வுக்குட்படுத்தின.

அரபாத்தின் உடல் உறுப்புகளை ஆய்வு செய்த சுவீஸ் நாட்டின் நிபுணர்குழுவினர் யசீர் அராபாத் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என கடந்த மாதம் அறிவித்தது.

இந்த நிலையில் ரஷ்ய நாட்டின் நிபுணர் குழுவினரும் யசீர் அராபாத்தின் உடல் உறுப்புகளை கொண்டு அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டறிய தீவிர உடல்கூறு சோதனை நடத்தியது.

இப்போது ரஷ்ய நிபுணர்குழுவும் யசீர் அராபாத் விஷம் கொடுத்து கொல்லப்படவில்லை என்றும் அவரது மரணம் இயற்கையானது என்றும் அறிவித்து உள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்து உள்ளது.