யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி!!

948

ரயிலில் மோதுண்டு..

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். 45 வயதுடைய தந்தையும் 11 வயதுடைய மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துபிட்டவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ரயில் வீதியில் இந்த இருவரும் பயணிக்க முயற்சித்த போது, வேறு திசையில் இருந்து வந்த ரயில் இவர்களில் மோதியதாக குறிப்பிடப்படுகின்றது.