இணையத்தில் தேவதை என புகழப்படும் இளம்பெண் : அப்படி என்ன செய்தார் தெரியுமா?

366

தேவதை என புகழப்படும் இளம்பெண்

ஸ்கொட்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை இணையதளவாசிகள் ‘தேவதை’ என புகழாரம் சூட்டியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்த கெய்ட்லின் ஹார்வி என்கிற இளம்பெண் ஒரு நாள் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.


அதிக ம துபோ தையில் இருந்த கெய்ட்லின் ஹார்வி கழிவறைக்குள் நுழைந்த போது, அங்கு சுத்தம் செய்துகொண்டிருந்த பணிப்பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார். அப்போது அந்த பெண், நைஜீரியாவில் இருந்து சமீபத்தில் தான் நான் ஸ்காட்லாந்திற்கு குடிபெயர்ந்தேன். ஆனால் இங்கு எனக்கு ஒரு நண்பர் கூட கிடையாது என வேதனையுடன் கூறியுள்ளார்.

ம துபோ தையில் இருந்தாலும் கூட அதனை கேட்டு மனம் இரங்கிய கெய்ட்லின், அந்த பெண்ணை தன்னுடையாய் தோழியாக ஏற்றுக்கொண்டுள்ளார். தினமும் அவருடன் வெளியில் செல்வது மட்டுமில்லாமல், தற்போது அந்த பெண்ணின் குழந்தையுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் கெய்ட்லின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் இந்த சம்பவம் முழுவதையும் விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இணையதளவாசிகள், அந்த பெண்ணிற்கு உதவியதற்காக கெய்ட்லினை ‘தேவதை’ என பாராட்டி வருகின்றனர்.

உங்களை போன்ற மனிதர்கள் இங்கு அதிகம் தேவைப்படுகிறார்கள் என ஒரு பெண் பதிவிட்டுள்ளார். மற்றொரு பெண், உங்களுடைய இதயம் மிகப்பெரியது. இந்த வாழ்க்கையில் நீங்கள் ஒரு தேவதை என குறிப்பிட்டுள்ளார்.