
இங்கிலாந்தில் உள்ள பிராட் போர்டு நகரை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒரு இணைய தளத்தில் விபரீதமான விளம்பரம் வெளியிட்டு இருந்தார். விற்பனைக்கு குழந்தை தயார் என்ற தலைப்பில் அந்த விளம்பரம் வெளியாகி இருந்தது.
மேலும் அதில் தான் பெற்ற 4 மாத ஆண் குழந்தையை 1 கோடி 50 லட்சம் ரூபாய்க்கு விற்க தயாராக இருக்கிறேன். வாங்க விரும்புபவர்கள் என்னை அணுகலாம் என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இணையத்தளத்தில் அதை படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பெண்ணின் கொடூர முடிவை தடுத்து நிறுத்தும் படி பொலிஸாரிடம் முறையிட்டனர்.
அதை தொடர்ந்து பொலிஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு அப்பெண்ணை தேடி கண்டு பிடித்தனர். இதுகுறித்து விசாரித்த போது அந்த விளம்பரத்தை தான் வெளியிட வில்லை என அவர் மறுத்தார்.
ஆனால் அதை பொலிஸார் நம்பவில்லை. அவரிடம் 2 ஆண் குழந்தைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து சமூக நல இல்லத்தில் ஒப்படைத்தனர்.




