வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு பிரதமரால் திறந்து வைப்பு!

317


அவசர சிகிச்சை பிரிவு



வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (14.08) வவுனியா பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார்.



வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.




நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகுக்கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்றய தினம் பிற்பகல் 3 மணிக்கு வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.


முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன் முதல் நிகழ்வாக புதிய கட்டடத்திற்கான நினைவு திரைச்சீலையை பிரதமர் ரணில் மற்றும் சுகாதரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் சுகாதாரஅமைச்சர் ராஜித சேனாரத்ன, நெதர்லாந்து நாட்டின் துனைதூதுவர் ஈவா வான்வோசம்பா, கைத்தொழில் வர்தக அமைச்சர் றிசாட் பதியூதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிவமோகன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், மற்றும் மருத்துவர்கள், அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.