ஹோட்டலில் வரிசையில் நின்று பன்றிக் கறியை ருசி பார்த்த ஜனாதிபதி!!

1220

china_president

சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங், ஹோட்டலில் வரிசையில் நின்று சாப்பிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், பெய்ஜிங் நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஹோட்டல் ஒன்றுக்கு சென்றவர் அங்குள்ள உணவு வகைகளை சாப்பிட விரும்பினார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததுடன் மக்கள் வரிசையில் நின்று உணவுகளை வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

எனவே ஜனாதிபதியும் வரிசையில் நின்று உணவுகளை வாங்கி ருசி பார்த்தார். பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ரொட்டி வகைகள், வெங்காய பன் ரொட்டிகள், பச்சை காய்கறிகள், வறுத்த ஈரல், போன்றவற்றை வாங்கி சாப்பிட்டவர் அதற்கான பணத்தையும் கொடுத்து விட்டு போயுள்ளாராம்.

இதனை பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் வியந்து போனதுடன், பலரும் பாராட்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.