வவுனியா சுகாதாரப் பணிமனையில் ஒன்றுகூடிய உணவக உரிமையாளர்கள் : ஏன் தெரியுமா?

303

உணவக உரிமையாளர்கள்

வவுனியா பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் வவுனியா நகரிலுள்ள உணவு கையாளும் நிலையங்களில் காணப்பட்ட சுகாதாரமற்ற நிலைமைகளை பரிசோதனை மேற்கொண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கான உணவுப் பா துகாப்பு, உணவு சுகாதாரம் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி பசுபதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

நகரிலுள்ள உணவகங்களின் பா துகாப்பு சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக உணவக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், பிராந்திய பொது சகாதாரப்பரிசோதகர் எஸ்.ரவீந்திரன், மாவட்ட உணவு மருத்துவப் பரிசோதகர் பார்த்தீபன், தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெயரதன், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சிவபாலன், வவுனியா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள், உணவு கையாளும் நிலைய உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.