வவுனியாவில் இருந்து கலந்து கொண்டு தேசிய வூசூ குத்துச்சண் டையில் 11 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வீரர்கள்!!

319


தேசிய வூசூ குத்துச்ச ண்டை



அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்ச ண்டை போட்டியில் வட மாகாணத்திற்கு பதினொரு பதக்கங்கள் பெற்று வவுனியா வீர, வீராங்கனைகள் பெருமை சேர்த்துள்ளனர்.



கொழும்பு மகரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் விளையாட்டு உள்ளக அரங்கில் 2019 ஓகஸ்ட் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான வூசூ குத்துச்ச ண்டை போட்டியில் வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து கலந்துகொண்ட வவுனியாவைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் 11 பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.




தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்.எதிரிசிங்க தலைமையில் நடைபெற்ற வூசூ குத்துச்சண் டை போட்டியில் நாடு பூராவும் இருந்து 500 க்கு மேற்பட்ட் வீர,வீராங்களைகள் கலந்து கொண்டிருந்தனர்.


வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண வூசூ குத்துச்ச ண்டை பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில்; வவுனியாவை சேர்ந்த வீர,வீராங்கனைகள் தேசிய ரீதியிலான வூசூ குத்துச்சண் டையில் கலந்து கொண்டு ஏழு தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் மூன்று வெண்கலப்பதக்கத்தையும் சுவீகரித்துள்னர்.

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்திலாயம், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா காமினி மகாவித்தியாலயம், கூமாங்குளம் சித்திவினாயகர் வித்தியாலயம், மடுக்கந்த ஸ்ரீதம்மரத்ன வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.


தேசிய ரீதியில் நடை பெற்ற ஒன்பதாவது வூசூ போட்டியில் ‘தாவுலு’ என்ற சீன தற்காப்புக்கலை போட்டியிலும் வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.