வவுனியா நகரசபை மைதானத்தில் ஏற்றப்பட்ட சுதந்திரவான பட்டம்!!

467

சுதந்திரவான பட்டம்

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் மாவட்ட மட்டங்களில் நடாத்தப்படுகின்ற சுதந்திரவானம் எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் பட்டமேற்றும் நிகழ்வு வவுனியா மாவட்ட கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்திலுள்ள சிறுவர் கழக சிறுவர்களின் பங்களிப்பில் இன்று (27.08.2019) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதி வவுனியா மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பாலகுமார் முதலாவது பட்டத்தினை ஏற்றி வைத்ததுடன் ஏனைய சிறுவர்களும் தங்களது பட்டங்களை ஏற்றினார்கள்.

பட்டமேற்றும் நிகழ்வில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி , கள இயக்க கிளை பிரதம முகாமைத்துவ உதவியாளர் கிருஸ்னதேவா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் தட்சாயினி மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பட்டமேற்றும் மரபு தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுவதினால் சிறுவர்கள் மூலம் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாகவே இப் பட்டமேற்றும் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.