வவுனியா மாவட்ட செயலகத்தில் கிராம பாதுகாப்பு தொடர்பாக விசேட செயலமர்வு!!

334

விசேட செயலமர்வு

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிராம பா துகாப்பு தொடர்பான செயலமர்வு இன்று (29.08.2019) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிச்செயலாளர் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தனர்.

கிராமத்தின் சமூகம் தொடர்பாக முழுமையான மீளாய்வொன்றை செய்து தகவல் தொகுதியொன்றினை நாடாத்திச்செல்லுதல், வெளிப்புற எதிரிகளினால் கிராமத்திற்கு தொடுக்கக் கூடிய சவால்களை நேரகாலத்துடன் அடையாளம் காணும் உளவுத் தகவல்களைத் தொடர்ந்து திரட்டுதல்,

வெளிப்புறங்களிலிருந்து கிராமத்திற்கு வருகின்ற நபர்கள், அமைப்புக்கள் தொடர்பாக எப்பொழுதும் அவதானமாக இருந்து கொண்டு உரிய தகவல்களை சேகரித்தலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு பிரிவுகளுக்கு அறிவுறுத்தலும்,

கிராமச் சமூகத்தின் ஒற்றுமை, சகவாழ்வு , சகோதரத்தன்மை என்பவற்றை விருத்தி செய்யக்கூடிய செயற்பாடுகளை மேம்படுத்தல் போன்ற 16 செயற்றிட்டங்கள் கிராம பாதுகாப்பு செயற்றிடத்தினுடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பிலான முழுமையான விளக்கத்தினை உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதேச மற்றும் மாவட்ட உதவிச் செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பா துகாப்பு ப டையின் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர்நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.