வவுனியா மாவட்ட செயலகத்தில் ஒன்றுகூடிய ஐநூறுக்கு மேற்பட்ட இளைஞர்கள் : காரணம் என்ன?

557


வவுனியா மாவட்ட செயலகத்தில்..



வவுனியா மாவட்ட செயலகத்தில் 750க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இலவச சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.



வவுனியா, செட்டிக்குளம், நெடுங்கேனி போன்ற பகுதிகளில் வசித்து வரும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 750 இளைஞர் யுவதிகளுக்கு மருத்துவ சான்றிதழ், சாரதி பயிற்சி என்பனவற்றை முற்றிலிலும் இலவசமாக பெற்றுக்கொடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்படவுள்ளது.




இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இன்றையதினம் (31.08.2019) வவுனியா மாவட்ட செயலகத்தில் மருத்துவ சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


வர்த்தக கைத்தொழில், நீண்டகால அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சினுடாக ஒதுக்கப்பட்ட 11.25 மில்லியன் ரூபா நிதியில் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இச் செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நகர இணைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி, வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். லறீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.