வவுனியாவில் ந ஞ்சரு ந்தி த ற்கொ லை செய்வோம் : சுகாதாரத் தொண்டர்கள்!!

344

சுகாதாரத் தொண்டர்கள்

வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையினால் நேர்முகத் தேர்விற்குட்படுத்திய சுகாதார தொண்டர்களில் 65 பெயரை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்பெயர் விபரப்பட்டியலில் சுகாதாரத் தொண்டர்களாக சேவை மேற்கொண்டு 100 நாட்கள் போராட்டம் நடத்திய 20பேரின் பெயர் விபரங்கள் வெளிவரவில்லை, தொடர்ச்சியாக தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் நியமனத்திற்காக போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டும் தமது பெயர் விபரங்கள் வெளிவரவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாங்கள் மிகவும் மன அ ழுத்ததிற்குட்பட்டுள்ளதாகவும் குடும்ப சுமை காரணமாக தாங்கள் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற யு த்தக் காலத்திலிருந்து தற்காலிகமாக சேவையில் இணைத்து கொள்ளப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 120 பேர் தமது பதிவினை மேற்கொண்டு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் தொடர் போ ராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது நிரந்தர நியமனத்தினைக் கோரியிருந்தனர்.

அப்போ ராட்டம் 100நாட்களை அடைந்ததும் வடமாகாண சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து போ ராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு தொடர்ச்சியாக தமது நியமனத்திற்கான போ ராட்டங்களை ஆக்கங்கே மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சேவைக்காலம் கல்வித்தகமை அடிப்படையில் நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டு நேர்முகத் தேர்வு வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று 65பேரின் பெயர் விபரங்கள் உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பெயர் விபரங்களில் போ ராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 20பேரை புறக்கணித்துள்ளதாகவும் தமக்கான இணைத்துக்கொள்வதற்காக தகமைகள் இருந்தும் உள்வாங்கப்படவில்லை.

தொடர்ச்சியாக தமக்கான நியமனத்தில் புறக்கணித்து வருவதாகவும் இவ்வாறான சூழ்நிலைகளினால் குடும்ப நிலைமையில் தாங்கள் அனைவரும் ந ஞ்சருந்தி த ற்கொ லை செய்துகொள்வதைத்தவிர தமக்கான மாற்று வழிகள் இல்லை என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர்.