வவுனியாவில் வாடிக்கையாளரால் வர்த்தகருக்கு நேர்ந்த கதி!!

346

வர்த்தகருக்கு நேர்ந்த கதி

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு வாடிக்கையாளரினால் அவமரியாதை ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தக நிலையத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்று மின்சார அடுப்பு ஒன்றினை கொள்ளவனவு செய்துள்ளார்.

குறித்த அடுப்பினை வாடிக்கையாளர் வீட்டிற்கு எடுத்துச்சென்று பயன்படுத்திய பின்னர் மீண்டும் அதனை வர்த்தக நிலையத்திற்கு எடுத்துச்சென்று இதனை மாற்றி இதற்கான பணத்தினை மீளத்தருமாறு கோரியுள்ளார்.

இதன் போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் நீங்கள் குறித்த மின்சார அடுப்பினை உபயோகித்துள்ளீர்கள் மின்சார அடுப்பில் எதேனும் குறைகள் உள்ளனவா அல்லது இதற்கு பதிலான வேறு மின்சார அடுப்பினை தரவா என கேட்டுள்ளார். இதற்கு வாடிக்கையாளர் மின்சார அடுப்பு பிடிக்கவில்லை எனவே பணத்தினை மீளத்தருமாறு கோரியுள்ளார்.

இதன் போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு வர்த்தக நிலையத்தினை விட்டு வெளியேறிய வாடிக்கையாளர் குறித்த வர்த்தக நிலையம் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், பொருளுக்கு பொருள் மாற்றம் செய்து நாங்கள் வாடிக்கையாளருக்கு வழங்குகின்றோம். பாவித்த பொருளை மீளப்பெற்றுக்கொண்டு எவ்வாறு பணத்தினை வழங்க முடியும்.

வாடிக்கையாளர் மின்சார அடுப்பினை பாவித்துவிட்டு பணத்தினை மீளத்தருமாறு கோருவது தவறு. மின்சார அடுப்பில் பிழைகள் இருந்தால் உத்தரவாதச் சான்றிதழ் மூலம் நாங்கள் மாற்றி வழங்குவதற்கு தயார் என தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக வாடிக்கையாளர் கருத்து தெரிவிக்கையில்,

மின்சார அடுப்பானது பாவனைக்கு ஒவ்வாத வகையில் பழுதடைந்து காணப்பட்டது. மின்சார அடுப்பை வர்ததக நிலையத்தில் திருப்பி கொடுத்தபோது வர்த்தக நிலையத்தினர் திரும்பபெற மறுத்தனர். அப்பணத்திற்கு பதிலாக வேறு பொருட்கள் வாங்குமாறு வற்புறுத்தியதுடன் தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களினால் பேசியுள்ளார்கள் என தெரிவித்தார்.