வவுனியாவில் வரதராஜப்பெருமாளின் படத்திற்கு விளக்குமாறால் அடித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

329


வவுனியாவில்..



வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் படத்திற்கு விளக்குமாற்றால் அடித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆ ர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.



வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 930 ஆவது நாளாக போ ராட்டத்தில் ஈடுபட்டுவரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களே குறித்த ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உ யிருடன் இல்லை. இனி சர்வதேச விசாரணையும் இல்லை. உள்நாட்டு விசாரணையும் இல்லை. தமிழ் மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் வவுனியாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.


குறித்த கருத்தை வன்மையாக கண்டித்த கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வரதாராஜபெருமாளின் படத்தினை ‘தமிழர் இ ரத்தம் குடிக்கும் ஒட்டுக்குழு வரதர்’ என குறிப்பிட்டு காட்சிப்படுத்தி, அவருக்கு எதிரான கோசங்களை எழுப்பி ஆ ர்ப்பாட்டம் செய்ததுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரின் படத்திற்கு சாணி தண்ணீரில் விளக்குமாற்றை தோய்த்து அடித்து தமது கோபத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் முன்னாள் முதலமைச்சரை திட்டியும் தீர்த்தனர்.


இதன் கருத்து தெரிவித்த கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகள் கா ணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசாங்கம் பொறுக்கு கூற வேண்டும். எமது பிள்ளைகள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போ ராட்ட களத்தில் நாம் தினமும் செ த்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலையில் எமது பிள்ளைகள் கா ணாமல் போனபோது அரசுடனும், இந்தியாவுடனும் இணைந்து ஒழித்திருந்த ஒட்டுக்குழு வரதர் தற்போது எமது பிள்ளைகளை இல்லை எனக் கூற என்ன அருகதை இருக்கிறது.

அவரது மகள், மனைவி கா ணாமல் போயிருந்தால் இப்படி சொல்லியிருப்பாரா? என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், தமது போ ராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கண்ணீர் மல்க கோரினர். இவ் ஆ ர்ப்பாட்டத்தில் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.