வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா!!

15


கற்றல் வள நிலைய திறப்புவிழா


வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 17 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலைய திறப்புவிழா இன்று (09.09.2019) காலை 8 மணியளவில் இடம்பெற்றது.பாடசாலையின் அதிபர் தியாகசோதி யுவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் கட்டிடத்தினையும் திறந்து வைத்தார்.


இந் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் மற்றும் வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.