வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!!

246

உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம், இராசேந்திரகுளம் பகுதிகளை சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு இன்று (09.09.2019) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த 5000 ரூபா ஒய்வூதிய உதவிப் பணத்தில் தங்களது வாழ்க்கையினை நாடாத்தி வரும் இரு குடும்பத்தினர் உட்பட நான்கு குடும்பத்தினருக்கு இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

உதவி வழங்கி வைக்கப்பட்ட சமயத்தில் பிள்ளைகளின்றி தனிமையில் வாழும் குறித்த தாய், தந்தைகள் கண்ணீர் மல்கி கிராம சேவையாளர் உட்பட ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நடராஜா சிவகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தமை அங்கிருந்த அனைவரது மனங்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

ஊடகவியலாளர் பா.கதீஷனின் வேண்டுகோளிக்கிணங்க ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த நடராஜா சிவகுமாரின் நிதியில் ஒர் குடும்பத்தினருக்கு 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றும் சிறு பணம் வீதம் (மொத்தமாக ரூபா20000 மற்றும் சிறு தொகை பணம்) நான்கு குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இச் செயற்றிட்டத்தில் ஊடகவியலாளர் பா.கதீஷன், இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் ப.பிரதீப், ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த நடராஜா சிவகுமார் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நடராஜா சிவகுமார் மாதாந்தம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறான பல உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.