வவுனியா பாடசாலைகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயற்றிட்டம்!!

366


விழிப்புணர்வு செயற்றிட்டம்



முதியோரின் விழுமியங்கள் மாணவரை நம்பிக்கை உள்ளவராக வளர்க்கும் விழிப்புணர்வு செயற்றிடம் வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் பூலோகசிங்கம் தலைமையில் இன்று காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.



இதில் மாணவர்களின் பல்வேறு ஆக்க இலக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றன. சிறப்பு நிகழ்வாக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் மூத்தோர் மாண்பு பற்றி உரை நிகழ்த்தினார்.




ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடன் சான்றோன் ஆக்குதல் தந்தை கடன் என்ற வாசகத்திற்கிணங்க தாய் தந்தையரை மதிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்து பின்பற்றும் பிள்ளை சமூகத்தையும் மதிக்கக்கற்றுக்கொள்ளும் நல்ல பிரஜையாக வளர்வார்கள்.


பிள்ளைகள் நம்பிக்கையுள்ளவராக மாற வேண்டுமானால் மூத்தோர் வாழ்க்கை முறையையும் மூத்தோரின் சிந்தனைகளையும் தேடி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாளைய சமூகத்தின் சிற்பிகளாக விளங்க இருக்கும் மாணவர்கள் தம்மை பற்றிய உயர்ந்த எண்ணங்களைக்கொண்டிருக்க வேண்டும். வானளாவ நினைத்தால் தான் நாம் பனை அளவாவது உயர முடியும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு வாழப்பழக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் முதியோர் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் தொடர்ச்சியாக வலயக் கல்விப்பணிமனையுடன் இணைந்து மாவட்ட சமூக சேவை அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.