வவுனியாவில் வழமைக்கு திரும்பிய இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள்!!

335

வவுனியாவில் வழமைக்கு திரும்பிய..

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் கடந்த மூன்று நாட்களாக தொடர் பணிப்புறக்கணிப்பு போ ராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இ.போ.ச ஊழியர்களுக்கான 2016.30 , 2016.02 அரச நிர்வாக சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி அகில இ.போ.ச ஊழியர்களினால் செயற்படுத்தப்பட்ட தொழிற்சங்க போ ராட்டத்திற்கு செப்டம்பர் மாதம் 4ம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சம்பளப் போ ராட்டம் ஒராண்டு நிறைவுபெற்றும் புதிய சம்பளம் ரூபா 2500 வழங்கப்படவில்லை. எனவே இதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்த போ ராட்டத்தில் அகில இலங்கை ரீதியிலுள்ள இ.போ.ச ஊழியர்கள் கடந்த (16.09.2019) காலை ஆரம்பித்த தொடர் வேலை நிறுத்த போ ராட்டம் மூன்றாவது நாளான நேற்று (18.09.2019) மாலையுடன் நிறைவுக்கு வந்தது.

இ.போ.ச ஊழியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அரசாங்கம் ஏற்று விரைவில் தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டமையினையடுத்து வேலை நிறுத்த போ ராட்டம் கைவிடப்பட்டது.

கோரிக்கையினை அரசாங்கம் ஏற்றுள்ளமையினையடுத்து இ.போ.ச வவுனியா சாலையில் நேற்று மாலை ஊழியர்கள் வெடி கொழுத்தி கொண்டாடினார்கள். தற்போது வவுனியாவில் இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்துகள் இணைந்து பொதுமக்களுக்கு சேவையினை வழங்கி வருகின்றன.