வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் : விசேட டெங்கு ஒழிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

311

டெங்கு தாக்கம்

வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா குருமன்காடு , மன்னார் வீதி , வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் , கல்வி நிலையங்கள் , தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றிக்கு முன்பாகவும் ,

கால்வாய்களுக்குள்ளும் , நகரையண்டிய பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.