வவுனியா விசவாயு தாக்கி ம ரணித்த நான்கு நகரசபை சுகாதார ஊழியர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு!!

318

சுகாதார ஊழியர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேர் கழிவகற்றல் கிடங்கு ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வி சவாயு தாக்கி கடந்த 25.04.2019 அன்று ம ரணமடைந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இன்று (19.09.2019) வவுனியா நகரசபை அமர்வின் போது நஸ்டஈடு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள மாடு வெ ட்டும் கொள்கலன் பகுதியில் மாட்டின் கழிவுகள் கொட்டப்படும் கிடங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நகரசபை தொழிலாளர்களில் நால்வர் குறித்த கிடங்கிலிருந்து தா க்கிய வி சவாயு காரணமாக ம ரணமடைந்திருந்தனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கு நஸ்டஈடு வழங்க வேண்டுமென சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு சபையின் தீர்மானம் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்ட நிலையில் இன்று இடம்பெற்ற சபை அமர்வின் போது கடமையின் உ யிரிழந்த நான்கு நகரசபை சுகாதார ஊழியர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடாக சபையின் முன்னிலையில் தலா ரூபா 1,50,000 வீதம் காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இக் காசோலையினை நகரசபை தலைவர், உபதலைவர், நகரசபை உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர்.