வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்களால் பதற்றநிலை!!

428


பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தை..



வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை நேற்று (20.09) இரவு முற்றுகையிட்டமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நபர் ஒருவர் தன்னை தா க்கியதாக தெரிவித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.




குறித்த முறைப்பாட்டிற்கமைய புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.


இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்கியதாக தெரிவித்த முறைப்பாடு பொய் எனவும், கைது செய்யபட்ட இளைஞரை விடுவிக்ககோரியும் புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த என்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டுள்ளனர்.

இதேவேளை இளைஞரை தா க்கிய பிரதேசசபை உறுப்பினரிடம் விளக்கம் கேட்க சென்ற இளைஞரின் மனைவியை, பிரதேசசபை உறுப்பினரும், அவரது மனைவியும் தா க்கியதாக தெரிவித்து பிறிதொரு முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய பொலிசார் பிரதேச சபை உறுப்பினரின் மனைவியை கைது செய்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததுடன், முறைப்பாடளித்த பிரதேசசபை உறுப்பினர் மற்றும் தா க்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவியும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது செய்யப்பட்ட பின்னர் மக்கள் பொலிஸ் நிலையத்திலிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.