வவுனியாவில் தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி எழுப்பிய சமிஞ்சை!!

586

தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி..

வவுனியா – தாண்டிக்குளம் சந்தியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக ஒலியெழுப்பிய ஒலி, ஒளி சமிஞ்சை சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிரத கடவையில் ஒலி, ஒளி சமிஞ்சை நேற்று மாலை முதல் தொடர்ந்து ஒலி எழுப்பியபடி இயங்கி கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த வீதியூடாக பயணம் செய்த பொதுமக்கள் அச்சத்துடன் பயணத்தை தொடரவேண்டிய அசௌகரியமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவ்விடத்திற்கு சென்று போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தியதுடன், பொலிஸாருக்கும் இது தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் குறித்த சமிஞ்சை, தொடர்ச்சியாக ஒலி எழுப்புவது சீர்செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவளை கடந்த வாரமும் குறித்த கடவையில் இவ்வாறான கோளாறு ஏற்பட்டநிலையில் பல மணிநேரங்களுக்கு பின் சீர்செய்யபட்டுள்ளது.

அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்ற இக் கடவையில் அடிக்கடி இவ்வாறான கோளாறுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை நிரந்தரமாக சீர்செய்யவேண்டிய அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதாக அவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.