வவுனியாவில் 19 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!

491

வழக்குத் தாக்கல்

வவுனியாவைச் சேர்ந்த 19 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தமை, விலை மற்றும் காலாவதி திகதி பொறிக்கப்படாத நிலையில் பொருட்களை விற்பனை செய்தமை,

விலைகள் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் 19 வர்த்தக நிலையங்களில் இருந்து பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன.

குறித்த 19 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.