வவுனியாவில் வெறிச்சோடிய பாடசாலைகள் : அதிபர், ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

550

வெறிச்சோடிய பாடசாலைகள்

வவுனியா மாவட்டத்தில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவுப் போ ராட்டம் காரணமாக பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

சம்பள முரண்பாடுகள், நிலுவைச்சம்பளத்தை வழங்காமை, மாணவர்களின் ஒழுக்கத்தை பேணும் ஆசிரியர்களை பாதுகாக்காமை, ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை.

சில பாடசாலைகள் திறந்திருக்கின்ற போதும் ஒரு சில மாணவர்கள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, குறித்த சுகயீன லீவுப் போராட்டத்திற்கு 30 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.