வவுனியாவில் பௌத்த பிக்குகளின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம்!!

507

வவுனியாவில்..

செம்மலை, நீராவியடி ஆலயத்தில் பௌத்த பிக்குகள் நீதிமன்ற தீர்ப்பை மீறி மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டித்து வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (26.09.2019) கவனயீர்ப்புப் போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் ஜனானுஜன் தலைமையில் குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் இடம்பெற்றது.

போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நீராவியடி எங்கள் பூமி, இலங்கையில் தேரர்களுக்கு ஒரு சட்டம் மக்களுக்கு ஒரு சட்டமா, காவி உடையில் காடையர்களா, இனங்களுக்கிடையில் முறுகலை தூண்டாதே, ஞானசார தேரரை கைது செய், பௌத்தம் போதிக்கும் தர்மத்தை சிதைக்காதே, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

அத்துடன் தேரர்களுக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன், பிக்குகளின் அடாவடியை வெளிப்படுத்திய பதாதைகளையும் தீயிட்டு எரித்தனர்.

குறித்த ஆ ர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, செந்தில்நாதன் மயூரன், எம்.பி.நடராஜா, நகரசபைத் தலைவர் இ.கௌதமன்,

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கம், நகரசபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுயாதீன இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.