வவுனியா செட்டிகுளத்தில் பௌத்த பிக்குகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!!

551

வவுனியா செட்டிகுளத்தில்..

நீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளி பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தீர்த்தக்கரைக்கு அருகாமையில் பௌத்த துறவியின் உடலை தகனம் செய்தமையினை கண்டித்தும் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டமையினை எதிர்த்து வவுனியா செட்டிக்குளத்தில் இன்று (26.09.2019) கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று இடம்பெற்றது.

செட்டிகுளம் பொதுமக்களின் ஏற்பாட்டில் செட்டிகுளம் சமூர்த்தி அலுவலகத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியானது செட்டிக்குளம் – மன்னார் வீதி பிரதான வீதியூடாக செட்டிகுளம் பேரூந்து நிலையத்தினை சென்றடைந்து பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே நீதித்துறையின் நம்பகத்தன்மையினை நிரூபி, ஒடுக்காதே ஒடுக்காதே தமிழர்களை ஒடுக்காதே , போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இவ் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் அந்தோனி, வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.