வவுனியாவில் 3.5 கிலோ க ஞ்சா மீட்பு : இருவர் கைது!!

785

இருவர் கை து

வவுனியாவில் 3.5 கிலோ கிராம் கே ரள க ஞ்சாவுடன் இருவர் கை து செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (26.09.2019) மாலை குறித்த இருவரும் வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் கை து செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த பேரூந்தை வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக போ தை ஒ ழிப்புப் பிரிவு பொலிசார் சோ தனை செய்தபோது பயணப் பொ தியினுள் மறை த்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 702 கிராம் கே ரள க ஞ்சாவுடன் ஒருவரும், பிறிதொரு நபரின் பயணப் பொ தியில் இருந்து 1 கிலோ 802 கிராம் கே ரள க ஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த க ஞ்சா பொலிசாரால் மீ ட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, குறித்த இரு சந்தேக நபர்களும் பளை பகுதியில் இருந்து குறித்த பேரூந்தில் ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.