வவுனியாவில் மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிப்பு!!

521

மோட்டார் சைக்கிள்

வவுனியா – கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ யிட்டு எ ரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வீட்டில் வசிப்போர் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த மோட்டார் சைக்கிளை தீ யிட்டு எ ரித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் தீயில் முற்றாக எரிந்துள்ளதை அவதானித்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.