வவுனியாவில் சர்வமதக் குழுவினர் கலந்துரையாடல்!!

15


கலந்துரையாடல்


வவுனியாவில் சர்வமதக் குழுவினரின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதன்போது உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற கு ண்டுத் தா க்குதலைத் தொடர்ந்து சர்வமத குழுவால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


அத்துடன் அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு மத நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களினூடாக மத நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.


இக்கலந்துரையாடலில், இலங்கை தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, வளவாளர் ரசிகா செனவிரட்ன, உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், மதகுருமார்கள், சர்வமதக் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.