நடுவீதியில் செய்த செயலால் ஒரே நாளில் பிரபலமான இளம்பெண்!!

427

பிரபலமான இளம்பெண்

கேரளாவில் நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து தனது இருசக்கர வாகனத்துடன் இளம்பெண் நின்ற வீடியோ வைரலான நிலையில் அது தொடர்பான உண்மை தெரியவந்துள்ளது.

கேரளாவின் பெரும்பாவூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில், அரசு பேருந்து வந்துள்ளது. சாலை விதிகளை மீறியபடி எதிர்புறத்தில் பேருந்து வருவதை டூவீலரில் வந்த ஒரு பெண் பார்த்தார்.

பேருந்து தவறான பாதையில் வருகிறது என்று தெரிந்ததும், மற்ற வாகன ஓட்டிகள், அதற்கு வழிவிட்டு ஒதுங்கி போனார்கள். ஆனால் இந்த பெண் மட்டும் அப்படியே நடுரோட்டில் பேருந்து முன்னாடி நின்றார். இதை பேருந்து ஓட்டுனர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேலும் அந்த பெண் ஒதுங்கி போவார் என்று நினைத்து அப்படியே பேருந்தை எடுக்காமல் இருந்தார்.

ஆனால் பெண் அசரவே இல்லை. சிறிது நேரம் கழித்து, வேறு வழியில்லாமல் ஓட்டுனர் பேருந்தை கிளப்பி கொண்டு சரியான வழியில் சென்றார். அதன்பின்பு தான் அந்த பெண் அங்கிருந்து நகர்ந்தார்.

இது தொடர்பான வீடியோ இரு தினங்களாக வைரலான நிலையில் அந்த பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இதில் சம்மந்தப்பட்ட பெண்ணான சூர்யா மானீஷ் என்பவரே இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், இப்படி வீடியோ வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் ஓட்டுனருக்கு சவால் விடுவதற்காக அப்படி நிற்கவில்லை. அந்த வீடியோவில் கடைசி நேர காட்சி தான் இருந்தது. ஆனால், நான் அப்படி பேருந்து முன்னாடி நிற்க ஒரு காரணம் இருந்தது.

அந்த சாலையில் எனக்கு முன்னால் ஒரு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பேருந்து இடது புறம் சென்று நின்றது. அந்த நேரத்தில் பள்ளி பேருந்து திரும்பியபோது, நான் சென்ற சாலையில் எதிரே அரசு பேருந்து ஒன்று இன்னொரு வண்டியை ஓவர்டேக் செய்து கொண்டு வந்தது.

அப்போது அதை பார்த்து அ திர்ச்சி அடைந்த நான், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அ திர்ச்சியுடன் நின்றேன். அந்த பேருந்து வந்த வேகத்துக்கு எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம்.

ஆனால் அந்த பேருந்து ஓட்டுனரால் தான் நான் உ யிர் த ப்பினேன். அவர் தான் வேகத்தை உடனே குறைத்து வலது புறமாக திருப்பி சென்றார், அதனால் அவரை யாரும் தி ட்டாதீர்கள் என கூறியுள்ளார்.