வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியா – ஓமந்தையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். தனது வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிந்த இளைஞனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டையிழந்த அவர் வீதியின் அருகில் இருந்த மதகுடன் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட போதும் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உ யிரிழந்தவர் 20 வயதுடைய பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் பிரிந்தன் எனத் தெரியவருகின்றது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





