பாகிஸ்தானில் பழமைவாய்ந்த சிவன் கோவிலில் 66 ஆண்டுகளின் பின் பூஜை!!

686

Pakistanபாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலில் 66 ஆண்டுகளுக்குப் பின் பூஜைகள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், சக்கரவால் என்னும் இடத்தில் புராதன, கடாஸ்ராஜ் சிவன் கோவில் உள்ளது.

இந்தக் கோவில் 900 ஆண்டுகளுக்கு முந்தையது. இங்குள்ள குளம், சிவனின் கண்ணீரால் உருவானதாக வரலாறு கூறுகிறது. இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் விலகும் என்று இந்துக்கள் நம்பினர். கடந்த 1947ல் இருநாட்டு பிரிவினைக்குப் பின் இந்தக் கோவிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.

கோவில் குளத்தைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாலும் பராமரிப்பு இல்லாததாலும், குளம் வறண்டு போனது.

இந்நிலையில் பல கோடி ரூபாய் செலவில் ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது. புதுப்பிக்கும் பணி முடிந்ததும் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 66 ஆண்டுக்கு பின் தற்போது இக்கோவிலில் பூஜைகள் நடக்கின்றன. இதுகுறித்து, பாகிஸ்தான் தொல்லியல் துறை தலைவர் அஸ்மத் தாஹிரா கூறியதாவது..

பழமை மாறாமல் இக்கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த புனரமைப்புக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் நன்றி கூறினாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடாஸ்ராஜ் கோவில் அமைந்துள்ள பகுதி இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல இங்கு, ஒரு பௌத்த மடம், சீக்கிய மாளிகைகள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வழிபாட்டு மையங்களும் உள்ளன. இவ்வாறு அஸ்மத் தாஹிரா கூறினார்.