வவுனியா நகரசபை பொது நூலகத்தில் இலத்திரனியல் நூலகப்பிரிவு திறந்து வைப்பு!!

644

இலத்திரனியல் நூலகப்பிரிவு

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் இலத்திரனியல் நூலகப்பிரிவு இன்று (01.10.2019) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இலத்திரனியல் நூலகப்பிரிவினை நகரசபை தவிசாளர், உபதவிசாளர், நகரசபை உறுப்பினர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.

இலத்திரனியல் நூலகப்பிரிவிற்கு நகரசபையின் ரூபா 8,50,000.00 நிதியொதுக்கிட்டில் கணணிகள் மற்றும் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தனது தனிப்பட்ட நிதியில் கணிணியொன்றும் கொள்வனவு செய்து வழங்கியுள்ளார்.

வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நகரசபை தவிசாளர் இ.கௌதமன், நகரசபை உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி, நகரசபை உறுப்பினர்கள், நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.