வவுனியாவில் சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

591

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமந்தை மத்திய கல்லூரி, மாணிக்கஇலுப்பைக்குளம் ஆரம்ப பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு சர்வதேச சிறுவர் தினமான இன்று ஓமந்தை பொலிசாரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் பாடசாலைக்கு மின்விசிறிகள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன்,

மாணிக்கஇலுப்பைக்குளம் ஆரம்ப பாடசாலையில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலையில் கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வகுப்பறைகளுக்கு மூன்று மின்விசிறிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி சுரேஸ்த சில்வா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓமந்தைப் பகுதியிலுள்ள 15விஷேட தேவைக்குட்பட்ட வசதியற்ற பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பனவும் இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால் த சில்வா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.எம்.மல்வலகே, வவுனியா வடக்கு கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் இறுதியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சிற்றுண்டிகளும் பொலிசாரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.