வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கண்காட்சி!!

832

கண்காட்சி

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலத்தில் கண்காட்சி ஓன்று இன்று(03.10) இடம்பெற்றது. மனைப் பொருளியல், உயிரியல், விவசாயம் ஆகிய துறை சார்ந்த வகையில் இடம்பெற்ற இக் கண்காட்சியினை வவுனியா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரிய மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது.

குறித்த கண்காட்சியினை பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத், கல்வியற் கல்லுரி விரிவுரையாளர் திருமதி பத்மாவதி ஜெயசந்திரன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த கண்காட்சியில் உயிரினங்களின் தொகுதி, மூலிகைத் தாவரங்கள், மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகள், அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.

இதனை உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டு விளக்கங்களைப் பெற்றிருந்தனர்.