பிறந்து இரண்டு வாரங்களே ஆன அழகான பெண் குழந்தை ஒன்றை நாய் ஒன்று போற்றிப் பாதுகாத்து வருகிறது. குழந்தையின் பெயர் ரிவர், நாயின் பெயர் ஜீரோ.
ரிவர் பிறந்ததில் இருந்தே குழந்தையை விட்டு ஒருநொடி கூட பிரிய மனமில்லாமல் பாதுகாத்து வருகின்றது.
குழந்தைக்கு உடை மாற்றும் போது, குழந்தை தூங்கும் போது, குழந்தை தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் போதும் கூட எங்கும் செல்வதில்லையாம்.
குழந்தை தூங்கிய பிறகு தான் ஜீரோ உறங்கச் செல்லுமாம். குழந்தை எழுந்து விட்டால் குழந்தையின் தாய்க்கு தகவல் கொடுப்பது போல் குரைக்குமாம்.






