வவுனியாவில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கவனயீர்ப்பு போ ராட்டம்!!

227

வடக்கில்..

வடக்கில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஓன்று நேற்று (09.10.2019) மாலை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 963 நாட்களாக சுழற்சி முறையில் போ ராடி வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ ராட்ட தளத்திற்கு முன்னால் இந்த போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்கள் தெரிவித்ததாவது, குழந்தை பிறந்து 14 நாட்களே ஆன நிலையில் சாப்பாடு வாங்குவதற்காக சென்ற காராத்தே பயிற்றிவிப்பாளரான தனுசன் கடந்த 7 ஆம் திகதி (நேற்று முன்தினம்) க டத்தப்பட்டுள்ளார். மனைவியும் 1 குழந்தையும் அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா அரசாங்கமும் மாறி மாறி க டத்தலை செய்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு தீர்வை தர அவர்கள் தயாராகவில்லை. கா ணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு பதில் இல்லை. இதனால் யாருக்கு வாக்களித்தும் எந்த பயனும் இல்லை. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தலையிட்டு நீதியை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரினார்கள்.

இப் போ ராட்டத்தில் கா ணாமல் போயுள்ள தனுசனின் மனைவி குழந்தை உட்பட கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.