வவுனியா பொது நூலகத்தில் முன்பள்ளி சிறுவர்களுக்கான நிறந்தீட்டல் போட்டி!!

7


நிறந்தீட்டல் போட்டி


வவுனியா நகரசபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு “வாசிப்பும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி சிறுவர்களுக்காக நிறந்தீட்டல் போட்டி வவுனியா நகரசபை பொது நூலகத்தில் நேற்று (11.10.2019) காலை இடம்பெற்றது.நகரசபை எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கிடையே இப் போட்டி இடம்பெற்றிருந்தது.


பிரதம நூலகர் பாமினி உருச்சந்திரன் தலமையில் இடம்பெற்ற இச் செயற்றிட்டத்தில் பிரதம அதிதியாக நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் தர்சனா சுகுமார் கலந்து சிறப்பித்திருந்ததுடன் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், நூலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.