வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ம ரணம் : விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோட்டம்!!

2


வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..


வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ம ரணமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. இன்று மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் சந்தியில் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றை அதே வழியில் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதித்தள்ளியது.


இவ் விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த புளியங்குளம், முத்துமாரி நகரைச் சேர்ந்த கறுப்பையா சத்தியநாதன் என்பவர் கா யமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.


விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாது தப்பிச் சென்றுள்ள நிலையில், விபத்து குறித்து கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.