தவமிருந்து பெற்ற பிள்ளையை கருணை கொ லை செய்ய அனுமதி கோரிய பெற்றோர்!!

199


இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும் என மதனப்பள்ளி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு அளித்துள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதனப்பள்ளியை சேர்ந்த பாபஜான்- சபானா தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து . ர த்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்ததால் ஏற்பட்ட அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் பிறந்த சில நாட்களிலேயே இ றந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கும் அதே அபூர்வ நோ ய் ஏற்பட்டுள்ளது. அவர்கள், குழந்தைக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



இதுவரை ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் பலன் அளிக்கவில்லை.



இந்தநிலையில் மதனப்பள்ளி நீதிமன்றத்தில், கூலித்தொழிலாளியான பாபஜான், மனைவி சபானா ஆகியோர் சேர்ந்து ஒரு மனு அளித்துள்ளனர்.


அதில், தினமும் கூலி வேலை பார்த்து ரூ.300 சம்பாதிக்கும் என்னால், எனது பெண் குழந்தைக்கு மருத்துவ செலவுக்காக, அதிகளவில் பணம் செலவழிக்க முடியவில்லை.

எனவே அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட என்னுடைய மகளை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும். எனத் தெரிவித்திருந்தனர்.


மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இது போன்ற மனுக்களை மாவட்ட நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பாபஜான், சித்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்குச் செல்லகூட தன்னிடம் பணம் இல்லை. எனது குழந்தையை காப்பாற்ற யாராவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.