வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு : 8 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 2 பேருக்கு பிடியாணை!!

373

டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் அண்மைய காலங்களாக அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்பு பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை துப்பரவுப்பணிகள் செய்யத்தவறிய 8 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக இன்று நுளம்பு பெருக்கத்தடுப்புச்சட்டத்தின் கீழ் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு தங்கும் விடுதிகள் உட்பட எட்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது இரண்டு வர்த்தகர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கத்தவறியதால் அவர்களுக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன்,

ஒரு வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டு 25ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 5பேருக்கு வர்த்தக நிலையங்களில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக்கட்டுப்படுத்தி துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவறுத்தல் வழங்கப்பட்டு,

ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையல் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன் இவ்வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகர் சி.கிரிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா நகர்ப்புறப் பகுதிகளான தர்மலிங்கம் வீதி, மில் வீதி, பஜார் வீதி போன்ற பகுதிகளிலுள்ள வியாபார வர்த்தக நிலையங்களில் கடந்த சில தினங்களாக பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை நடவடிக்கையில் சுமார் 24பேருக்கு டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைய பெற்று வருகின்றனர்.

இதையடுத்து டெங்கு நுளம்பு பெருகும் வியாபார வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மழை நீர் தேங்கும் இடங்கள் அவதானிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் மொட்டை மாடிகள், தண்ணீத் தாங்கிகள், கூரைகளில் காணப்பட்ட வெற்றுப் போத்தல்கள் போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளமை கண்டறியப்பட்டு அப்பகுதிகளை துப்பரவுப் பணி மேற்கொள்வதற்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது கால அவகாசத்தை உதாசீனம் செய்து வர்த்தக நிலையங்களை துப்பரவு செய்யத் தவறிய இரண்டு தங்குவிடுகள் உட்பட எட்டு வர்த்தகர்களுக்கு எதிராக நுளம்பு பெருக்கத்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணகள் இடம்பெற்றபோது நீதிமன்றில் தோன்றத் தவறிய இரு வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றப்பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன்.

ஒரு வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டப்பணமாக 25ஆயிரம் ரூபாவினைச் செலுத்தியுள்ளார். மேலும் 5 வர்த்தகர்களுக்கு தமது வர்த்தக நிலையங்களை துப்பரவுப் பணிகள் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்காக ஐம்பதினாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதேவேளை அடுத்த தவணை எதிர்வரும் 29ஆம் திகதி வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக வியாபார நிலையங்களுக்கு பொதுமக்கள் வருகை தரவுள்ளனர். இந்நிலையில் தமது வியாபார நிலையங்களில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.