வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொ லை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

659

அதிர்ச்சித் தகவல்

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி கொ லை தொடர்பில் வவுனியா முருகனூர் பகுதியினைச் சேர்ந்த 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்கச்சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த மோதிரம் என்பவற்றுக்காகவே கொ லை செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வவுனியாவில் கடந்த 9 ஆம் திகதி சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கேதீஸ்வரன் சுவேந்திரபிரகாஸ் என்ற முச்சக்கரவண்டி சாரதி க டத்தப்பட்டு கொ லை செய்யப்பட்டிருந்ததுடன் அவரது உ டல் தீயில் எ ரிந்த நிலையில் கள்ளிக்குளம் பகுதியில் மீட்க்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மற்றும் பிராந்திய தீர்க்கப்படாத கு ற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பல தரப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் ம ரணித்தவரின் தொலைபேசியின் ஜீ.பி.எஸ் (GPS) மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொ லையாளி என சந்தேகிக்கும் நபர் ஒருவர் நேற்று (16.10.2019) காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் தானே தனி நபராக கொ லை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த மோதிரம் என்பவற்றுக்காகவே கொ லை செய்ததாகவும் ஏற்கனவே கடந்த 07.10.2019 அன்று கொ லை செய்ய திட்டம் தீட்டி நெடுங்கேணிக்கு அழைத்து சென்றதாகவும்,

எனினும் அன்றைய தினம் கொ லை செய்ய முடியாமல் போனதால் மீண்டும் கடந்த 9 ஆம் திகதி அன்று ஒமந்தை கள்ளிக்குளம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று தனது திட்டத்தின் படி இரவு 8 மணியளவில் முச்சக்கர வண்டி சாரதியின் க ழுத்தினை க த்தியால் வெ ட்டியபோது கத்தி இரண்டாக மு றிந்துள்ளது.

அதன் பின்னர் சாரதி தப்பித்துச் சென்ற போது அவரை விரட்டிச் சென்று க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ததுடன் எனது கைரேகை அவரின் உடலில் பதிந்தமையினால் முச்சக்கரவண்டியின் எரிபொருளை போத்தல் ஒன்றில் எடுத்து அவர் மீது ஊற்றி எ ரித்த பின்னர் அங்கிருந்து தப்பித்து காலி , அம்பாறை , நுவரெலியா, மாத்தறை போன்ற பல பகுதிகளுக்கு சென்று தலைமறைவாக இருந்ததாகவும் தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் என்பன மாத்தறை பகுதியில் மறைத்து வைத்துள்ளதாகவும் தனது வாக்குமூலத்தில் கொலை சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கொ லை செய்யப்பட்டவரின் ஆறு கடனட்டை மற்றும் விசா அட்டை, அடையாள அட்டை , பேஷ், முச்சக்கரவண்டி ஆவணங்கள், இரு தொலைபேசிகள், கொ லை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி , இடுப்புப் பட்டி என்பற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் இன்றையதினம் (17.10.2019) சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட வவுனியா முருகனூர் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபரை ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.