வவுனியா மன்னார் வீதியில் ஒரு மணிநேரமாக அச்சத்துடன் பயணித்த வாகனங்கள்!!

521

அ ச்சத்துடன் பயணித்த வாகனங்கள்

வவுனியா – மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்ட ஒளிச் சமிக்ஞை இன்று (17.10.2019) மதியம் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்திற்கு மேலாக சிவப்பு நிற ஒளி விட்டு விட்டு ஒளிர்ந்ததனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் புகையிரதம் வருகின்றது என்ற அ ச்சத்தில் பயணத்தினை மேற்கொண்டிருந்தன.

புகையிரதக் கடவையில் தன்னிச்சையாக சிவப்பு சமிக்கை ஒளிர்ந்தமையினால் அப் புகையிரதக் கடவையூடாக வேலைக்குச் செல்வோர் , மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்து எனக் கருதி அவ்விடத்தில் காவல் நின்றதுடன் அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

வடக்கில் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவை ஒளிச் சமிக்ஞைகள் இந்தியாவில் பாவனையில் இருந்து நீக்கப்பட்டவை என வடக்கு, கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்கம் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.