விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா அல் இக்பால் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று (25.10) முன்னெடுத்தனர்.

வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலய பிரதான வாயில் முன்பாக அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் ஆரம்பித்த குறித்த விழிப்புணர்வு ஊர்வலமானது சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் 3 கிலோ மீற்றர் தூரம் வரை இடம்பெற்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ‘ நேசிப்போம் நேசிப்போம் வாசிப்பை நேசிப்போம், வேண்டும் வேண்டும் ஊருக்கு ஒரு நூலகம், துப்பாக்கியை விட பெரிய ஆயுதம் புத்தகங்கள், வாசிப்போம் வாசிப்போம் நல்ல நூல்களை’ என கோசங்களை எழுப்பியிருந்ததுடன் சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது வாசிப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் துண்டுப் பிரசுரங்களையும் மாணவர்கள் ஊர்வலத்தின் போது கிராம மக்களுக்கு விநியோகித்தனர். குறித்த ஊர்வலத்தில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





