வவுனியாவில் களைகட்டும் தீபாவளிப் பண்டிகை : நகரத்தில் குவிந்த மக்கள்!!

584

தீபாவளிப் பண்டிகை

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் புத்தாடைகள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தீபாவளி பண்டிகை நாளைய தினம் (27.10.2019) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக வவுனியா நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த வருடத்தினைவிட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.