கைவிடப்பட்ட முயற்சிக்கு திரும்பிய மீட்புக் குழுவினர் : பரபரப்பாகும் இறுதி நிமிடங்கள்!!

507

பரபரப்பாகும் இறுதி நிமிடங்கள்

மணப்பாறையில் சுர்ஜித் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஏற்கனவே கைவிடப்பட்ட முயற்சியை அதிகாரிகள் மீண்டும் கையில் எடுக்க உள்ளனர்.

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து 72 மணி நேரங்களாக தொடர்ந்து போ ராட்டம் நடக்கிறது. பல தொழிநுட்ப உதவிகள் நாடினாலும் எதுவும் பயனளிக்கவில்லை.

தொடக்கத்தில் தனியார் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் இறுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் வீரமணி குழுவினர் களமிறங்கினார்கள். இவர்கள் 26 அடியில் குழந்தை சிக்கி இருக்கும் போது உள்ள சிறு ஓட்டை வழியாக கீழே அவர்களின் கருவியை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்கும் படி தயாராக இருந்தனர்.

ஆனால் அதற்கு முன்பே குழந்தை 70 அடிக்கு கீழே இறங்கி மேலே மண் மூடியதால் அந்த மண்ணை அகற்ற கால அவகாசம் இல்லாமல் முயற்சியும் பயனளிக்கவில்லை.

ஆனால் வீரமணி குழுவினரின் கருவியும், முயற்சியும் பலனளிக்கும் என்பதை அதிகாரிகள் அறிந்து கொண்ட நிலையில், இன்று மதியம் திடீரென வீரமணியை தொடர்பு கொண்ட அதிகாரிகள் மீண்டும் அதை முயற்சிக்க அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வீரமணி உள்பட 7 பேர் கொண்ட குழு மீண்டும் மணப்பாறைக்கு விரைத்துள்ளது.