எழுந்து வா சுர்ஜித்… மீட்புப் பணி நடக்கும் இடத்தில் விண் அதிர கோஷமிடும் இளைஞர்கள்!!

571

கோஷமிடும் இளைஞர்கள்

மீட்புப் பணி நடக்கும் இடத்தில் எழுந்துவா சுர்ஜித் என்று கோஷமிட்டு இளைஞர்கள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுர்ஜித்தின் மீட்பு பணிகள் நெடுக்காட்டுப்பட்டியில், நடைபெற்று வருகின்றது. அங்கு மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

மேலும், அங்கு பல அரசியல் தலைவர்கள் வந்து கொண்டு இப்பதால், பொலிசார் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு குழுமியிருக்கும் மக்களில் சில இளைஞர்கள் சுர்ஜித் மீண்டுவா என்ற வாசகத்துடன் கோஷமிட்டனர்.

அவர்களை பொலிசார் அமைதியாக இருக்குபடி அறிவுறுதிய நேரத்தில், வா க்குவாதம் ஏற்பட்டது. பின் பொலிசார், கோஷம் எழுப்பினால் மக்கள் வேறுமாதிரி புரிந்து கொள்வார்கள் என்று விளக்கினர்.

முன்னதாக இதுபோன்று மக்கள் கூறுவது பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.