வவுனியாவில் பிரச்சாரக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச!!

611

கோத்தபாய ராஜபக்ச

வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (28.10) மழைக்கு மத்தியில் அதிகளவான ஆதரவாளர்களுடன் இடம்பெற்றது.

வவுனியா, வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் மழைக்கு மத்தியில் 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூடத்திற்கு 11 மணியளவில் மேடைக்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரவாளர்கள் கோசமெழுப்பி வரவேற்றிருந்தனர்.

இதனையடுத்து வடக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பாக கோத்தபாய கலந்துரையாடியிருந்தார்.

குறித்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, கே.கே.மஸ்தான் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.